Archive for March 2015

உங்கள் மைலேஜ் அதிகரிக்க, ஏ.சி யை போடுங்கள் !!

ஊரில் எத்தனை அநியாயங்கள் நடந்தாலும் கண்டுக்கொள்ளாமல் இருக்கும் நம் மக்கள், பெட்ரோல்/டீசல் விலை லிட்டருக்கு ஒரு ரூபாய் ஏறினால் கூட கொதித்து போவார்கள். அதிலும் கார் வைத்திருப்பவர்களின் பாடு திண்டாட்டம் தான். கடந்த முறை அதிகளவில் பெட்ரோல்/டீசல் விலை இறங்கியபோது கார் வைத்திருக்கும் பெரும்பாலோனோர் ஜெயிலிலிருந்து வெளிவந்த கைதிகளை போல (என்னையும் சேர்த்து!!) காரை எடுத்துக்கொண்டு சுதந்திரமாக சுற்றினர்.

     அதனால் கார் வைத்திருக்கும் அனைவரும் மைலேஜ் அதிகமாக கிடைக்க பல குட்டிக்கரணங்கள் போடுவார்கள். கூகுளில் தேடி பல வழிமுறைகளை பின்பற்றுவார்கள். அதில் முக்கியமான ஒன்று, முடிந்தவரை ஏ.சி யின் பயன்பாட்டை குறைக்க வேண்டுமென்பதே. குளிர் காலங்களில் ஏ.சி யின் தேவையில்லாமல் பயன்படுத்தாமல் இருக்கும்போது கிடைக்கும் ஒன்றிரண்டு கூடுதல் மைலேஜில் குளிர்ந்துப்போகும் அனைவரும் வெயில் காலத்தில் பல்லை கடித்துக்கொண்டு ஏ.சி யை அணைத்துவிட்டு ஓட்டுவார்கள். இனி அது தேவையில்லை.


      நெடுஞ்சாலைகளில் ஏ.சி யை போட்டுக்கொண்டு போகும்போது மைலேஜ் குறைவதில்லை என்று சமீபத்திய அறிக்கை கூறுகிறது. இதற்கான அறிவியல் காரணம் என்னவென்றால், நெடுஞ்சாலைகளில் அனைவரும் சுமார் 80கிமீ க்கும் மேலே தான் செல்வர். பொதுவாக நெடுஞ்சாலைகளில் காற்றை தடைசெய்யுமளவுக்கு உயரமான கட்டிடங்கள் இருப்பதில்லை. அப்பொழுது நீங்கள் கண்ணாடிகளை இறக்கியிருந்தீர்கள் என்றால், உங்களது வாகனம் வேகமான காற்றை கிழித்துக்கொண்டு செல்லவேண்டுமென்பதால், இன்ஜினுக்கு வேலை பளுவு அதிகமாகும். இதனால் அதிக எரிப்பொருள் வீணாகும்.



     உங்களது கார் கண்ணாடிகள் மூடியிருந்ததால், இன்ஜினுக்கு எந்த கூடுதல் பளுவும் ஏற்படாது. ஆகவே, ஏ.சி யினால் ஏற்படும் எரிப்பொருள் இழப்பை விட திறந்திருக்கும் கண்ணாடியால் ஏற்படும் இழப்பு அதிகமாக இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது. குறிப்பு: இது நெடுஞ்சாலைகளுக்கு மட்டுமே பொருந்தும்.

     எனவே, வாசகர்களே எதற்கும் பயப்படாமல் ஏ.சி. யை போட்டுக்கொண்டு உங்கள் பயணத்தை தொடருங்கள் !!
Saturday, March 7
Posted by Sibhi Kumar SenthilKumar

புதிய பதிவுகள்

Recent Posts Widget

மெக்கானிக்

My photo
Automobiles enthusiast; Video/Photo/Audio editor; blog writer; auto consultant; web UI/UX designer; wrapper designer; personalized products designer at PrintVenue.com & fiverr.com, keyboardist, bathroom singer, optimist and so on. A good learner & listener.

மாஸ் ஆன போஸ்ட்'கள்

ரெகுலர் கஸ்டமர்ஸ்

© Sibhi S Kumar. Powered by Blogger.

- Copyright © வட்டங்களில் சுழலுது வாழ்க்கை -Metrominimalist- Powered by Blogger - Designed by Sibhi Kumar -